Agni Sakshi – Vanakkam Mudhal Variyai Song Lyrics

Song: Vanakkam Mudhal Variyai Song Lyrics

Lyricist: Vaali

Movie: Agni Sakshi


English Version

Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela
Music by : M. S. Viswanathan
Female : Vanakkam

Mudhal variyai ezhuthum mun

En mugavariyai ezhutha enninaen

Piraguthaan vaazhththugindra idhayaththukku

Vishaalamthaan mukkiyamae thavira

Vilaasam mukkiyamalla endru vittu vittaen
Female : Pushpangal kaithatti koopidaamalayae

Vandugal varuvathu pol

Unthan nadana arangai nokki nagar thaanaagavae

Nagarnthu nagarnthu varugirathu

Kaaranam abhinayam endra sollai

Neengal adhisayam endru arththapaduththukireergal
Female : Kaattrukkooda kaarsalagai katti vidakkoodiya

Kettikaarar neengal

Male : Kaattrukkooda kaarsalagai katti vidakkoodiya

Kettikaarar neengal ahhaahhaa
Female : Ungalai sirushtiththa karvaththil

Kalaimagalae thalaikanaththu nirkkiraal
Female : Oho purigirathu

Oru paiththiyam endru ennai parikasikkireergalo

Aam paiththiyamthaan paiththiyamthaan

Naan oru tamil paiththiyam

Pin kurippu

Vittu vittu vantha en idhayaththai

Viraivil thiruppi anuppu
Male : Padiththaen padiththaen kaditham

Adadaa varigal amutham

Padiththaen padiththaen kaditham

Adadaa varigal amutham

Paper arangam muzhuthum

Unthan pen-ah munaiyin nadanam

Pen- ah munaiyin nadanam
Male : Un chiththiram kann muttrilum

Varainthaaa vendum neril vaa

Un chiththiram kann muttrilum

Varainthaaa vendum neril vaa
Male : Soppanangal unnai theda

Suvaasanal ushnam yaera

Ninaikkum ninaippae karuga

Nee anaikkum padaiyaai varuga

Anaikkum padaiyaai varuga
Female : En Snegitharae

Ungal ezhuththukkalin inippirkku

Erumbugal varakkoodum enbathaal kadithaththai

En maar siraiyil maraiththu vaiththirukkiraen

Thabaalgalaiyae thaamboolangalaaga kondu
Female : Namakkul oru nichchiyathaarththamae

Nigazhunthu vittatho

Ini soppanagalill

Ennai theda vendaam
Female : Viyaalan maalai varuvaen

Vizhikkor virunthai tharuvaen

Viyaalan maalai varuvaen

Vizhikkor virunthai tharuvaen
Female : Bharathi silaiyin oram

Edhirpaarththirungal anthi neram

Edhirpaarththirungal anthi neram
Male : Uppukkadal karpukkeda

Thoduvaanam theendum velaiyil

Uppukkadal karpukkeda

Thoduvaanam theendum velaiyil
Male : Maiyitta kannaal neeyum

Kaiyoppam Ittaai kannae

Thanimai sugangal muzhukka

Nee thavanai muraiyil kodukka
Male : Dhinamum dhinamum varuga

Thanalil mezhugaai uruga

Mudhumai varaiyil inimael

Intha padhumai adiyaen madiyil

Padhumai adiyaen madiyil


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : வணக்கம்…..
முதல் வரியை எழுதும் முன்
என் முகவரியை எழுத எண்ணினேன்
பிறகு தான் வாழ்த்துகின்ற இதயத்துக்கு
விசாலம் தான் முக்கியமே தவிர
விலாசம் முக்கியமல்ல என்று விட்டு விட்டேன் பெண் : புஷ்பங்கள் கைதட்டி கூப்பிடாமலயே
வண்டுகள் வருவது போல்
உந்தன் நடன அரங்கை நோக்கி நகர் தானாகவே
நகர்ந்து நகர்ந்து வருகிறது
காரணம் அபிநயம் என்று சொல்லை
நீங்கள் அதிசயம் என்று அர்த்தப்படுத்துகிறீர்கள் பெண் : காற்றுக்கூட காற்சலங்கை கட்டி விடக்கூடிய
கெட்டிக்காரர் நீங்கள்
ஆண் : காற்றுக்கூட காற்சலங்கை கட்டி விடக்கூடிய
கெட்டிக்காரர் நீங்கள் அஹஹாஹ்ஹா பெண் : உங்களை சிருஷ்டித்த கர்வத்தில்
கலைமகளே தலைகனத்து நிற்கிறாள் பெண் : ஓஹோ புரிகிறது…………
ஒரு பைத்தியம் என்று என்னை பரிகசிக்கிறீர்களோ
ஆம் பைத்தியம் தான் பைத்தியம் தான்
நான் ஒரு தமிழ் பைத்தியம்
பின் குறிப்பு
விட்டு விட்டு வந்த என் இதயத்தை
விரைவில் திருப்பி அனுப்பவும் ஆண் : படித்தேன் படித்தேன் கடிதம்
அடடா வரிகள் அமுதம்
படித்தேன் படித்தேன் கடிதம்
அடடா வரிகள் அமுதம்
பேப்பர் அரங்கம் முழுதும்
உந்தன் பேனா முனையின் நடனம்
பேனா முனையின் நடனம் ஆண் : உன் சித்திரம் கண் முற்றிலும்
வரைந்தாக வேண்டும் நேரில் வா
உன் சித்திரம் கண் முற்றிலும்
வரைந்தாக வேண்டும் நேரில் வா ஆண் : சொப்னங்கள் உன்னைத்தேட
சுவாசங்கள் உஷ்ணம் ஏற
நினைக்கும் நினைப்பே கருக
நீ அணைக்கும் படையாய் வருக
அணைக்கும் படையாய் வருக பெண் : என் சிநேகிதரே
உங்கள் எழுத்துக்களின் இனிப்பிற்கு
எறும்புகள் வரக்கூடும் என்பதால் கடிதத்தை
என் மார்சிறையில் மறைத்து வைத்திருக்கிறேன்
தபால்களையே தாம்பூலங்களாக கொண்டு பெண் : நமக்குள் ஒரு நிச்சியதார்த்தமே
நிகழ்ந்து விட்டதோ
இனி சொப்பனங்களில்
என்னைத் தேட வேண்டாம் பெண் : வியாழன் மாலை வருவேன்
விழிக்கோர் விருந்தை தருவேன்
வியாழன் மாலை வருவேன்
விழிக்கோர் விருந்தை தருவேன் பெண் : பாரதி சிலையின் ஓரம்
எதிர்ப்பார்த்திருங்கள் அந்தி நேரம்
எதிர்ப்பார்த்திருங்கள் அந்தி நேரம் ஆண் : உப்புக்கடல் கற்புக்கெட
தொடுவானம் தீண்டும் வேளையில்
உப்புக்கடல் கற்புக்கெட
தொடுவானம் தீண்டும் வேளையில் ஆண் : மையிட்ட கண்ணால் நீயும்
கையொப்பம் இட்டாய் கண்ணே
தனிமை சுகங்கள் முழுக்க
நீ தவணை முறையில் கொடுக்க ஆண் : தினமும் தினமும் வருக
தணலில் மெழுகாய் உருக
முதுமை வரையில் இனிமேல்
இந்த பதுமை அடியேன் மடியில்
பதுமை அடியேன் மடியில்

Similar Posts