Ambikapathy (Old) – Amaravathiye Song Lyrics

Movie: Ambikapathy (Old)

Lyricist: Kannadasan

English Version

Singer : T. M. Soundararajan
Music by : G. Ramanathan
Male : Amaraavathiyae… en aasai kaniyamudhae…

Kamazhum thamizh manamae…ae…ae…

Kattazhaghae… nithilamae… ae…ae…ae…

Imaiyaadhu enai nokki

En uyirai kollai kondu

Amaiyaadha min pol agandraayae

Aattruveno aattruveno…
Male : Andhamaevum aravindha maa malaril

Vandha vedhavalliya

Andhamaevum aravindha maa malaril

Vandha vedhavalliya

Kadal thandha ponnin selviyaa

Kadal thandha ponnin selviyaa
Male : Madhan sindhai vaazhum velliyaa

Eendru kanda podhil aiyam kondu pesum

Ezhil nindrulaavum killaiyaal

Endru kanda podhil aiyam kondu pesum

Ezhil nindrulaavum killaiyaal
Male : Thunga maevum ila nangaiyaalin

Ezhil angam yaavum thangamae

Thunga maevum ila nangaiyaalin

Ezhil angam yaavum thangamae

Mugam pongum chandra bimbamae

Mugam pongum chandra bimbamae
Male : Sattrum angillai kalangamae

Pirai thundu pola

Nettri sangu pol kazhuthum

Sollum naadha inbamae

Pirai thundu pola

Nettri sangu pol kazhuthum

Sollum naadha inbamae
Male : Kondal naanum

Kuzhal sendai naadum

Kuzhal vandu naanum vizhiyaal…

Aa… aa… ae… aa… aa… aa…
Male : Kondal naanum

Kuzhal sendai naadum

Kuzhal vandu naanum vizhiyaal…

Karkandu naanum mozhiyaal

Karkandu naanum mozhiyaal

Vallai thandu naanum seviyaal

Minnal kandu naanum

Idai kondu thaenum suvai

Kundhi naanum idhazhaal
Male : Andhamaevum aravindha maa malaril

Vandha vedhavalliya

Kadal thandha ponnin selviyaa

Endru kanda podhil aiyam kondu pesum

Ezhil nindrulaavum killaiyaal

***END***

Tamil Version

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன்
ஆண் : அமராவதியே…

என் ஆசை கனியமுதே…

கமழும் தமிழ் மணமே….ஏ…

கட்டழகே…….நித்திலமே…ஏ…
ஆண் : இமையாது எனை நோக்கி

என் உயிரை கொள்ளை கொண்டு

அமையாத மின் போல் அகன்றாயே

ஆற்றுவேனோ ஆற்றுவேனோ…
ஆண் : அந்தமேவும் அரவிந்த மா மலரில்

வந்த வேதவள்ளியா

அந்தமேவும் அரவிந்த மா மலரில்

வந்த வேதவள்ளியா
ஆண் : கடல் தந்த பொன்னின் செல்வியா

கடல் தந்த பொன்னின் செல்வியா

மதன் சிந்தை வாழும் வெல்லியா
ஆண் : என்று கண்ட போதில்

ஐயம் கொண்டு பேசும்

எழில் நின்றுலாவும் கிள்ளையாள்

என்று கண்ட போதில்

ஐயம் கொண்டு பேசும்

எழில் நின்றுலாவும் கிள்ளையாள்
ஆண் : துங்க மேவும்

இள நங்கையாளின் எழில்

அங்கம் யாவும் தங்கமே

துங்க மேவும்

இள நங்கையாளின் எழில்

அங்கம் யாவும் தங்கமே
ஆண் : முகம் பொங்கும் சந்திர பிம்பமே

முகம் பொங்கும் சந்திர பிம்பமே

சற்றும் அங்கில்லை களங்கமே
ஆண் : பிறை துண்டு போல

நெற்றி சங்கு போல் கழுத்தும்

சொல்லொண்ணாத இன்பமே

பிறை துண்டு போல

நெற்றி சங்கு போல் கழுத்தும்

சொல்லொண்ணாத இன்பமே
ஆண் : கொண்டல் நாணும் குழல்

செண்டை நாடும் குழல்

வண்டு நாணும் விழியாள்…

ஆ…ஆ…ஏ… ஆ…ஆ…ஆ…

ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…
ஆண் : கொண்டல் நாணும்

குழல் செண்டை நாடும் குழல்

வண்டு நாணும் விழியாள்
ஆண் : கற்கண்டு நாணும் மொழியாள்

கற்கண்டு நாணும் மொழியாள்

பள்ளை தண்டு நாணும் செவியாள்
ஆண் : மின்னல் கண்டு நாணும் இடை

கொண்டு தேனும் சுவை

குந்தி நாணும் இதழாள்
ஆண் : அந்தமேவும் அரவிந்த மா மலரில்

வந்த வேதவள்ளியா

கடல் தந்த பொன்னின் செல்வியா

என்று கண்ட போதில்

ஐயம் கொண்டு பேசும்

எழில் நின்றுலாவும் கிள்ளையாள்

***நன்றி***