Dowry Kalyanam – Aandavane Kann Thirandhu Song Lyrics

Song: Aandavane Kann Thirandhu Song Lyrics

Lyricist: Vaali

Movie: Dowry Kalyanam

English Version

Singer : M. S. Viswanathan
Music by : M. S. Viswanathan
Male : Aandavanae kann thiranthu konjam paarungal

Aandavanae kann thiranthu konjam paarungal

Engal kalyaana veedugalin kadhaiyai kelungal

Engal kalyaana veedugalin kadhaiyai kelungal

Adhigaara maamiyaarin attakaasangal

Adhigaara maamiyaarin attakaasangal

Aval agampaava naavinilae melathaalangal

Dowry melathaalangal
Male : Aandavanae kann thiranthu konjam paarungal

Engal kalyaana veedugalin kadhaiyai kelungal

Engal kalyaana veedugalin kadhaiyai kelungal
Male : Marumagalin porul varavil kavanam vaikkindraal

Thaanum marumagalaai vantha naalai maranthu pogiraal

Marumagalin porul varavil kavanam vaikkindraal

Thaanum marumagalaai vantha naalai maranthu pogiraal
Male : Oru maganai sumanthathaalae ulagai ketkiraal

Ivalae than magalin thirumanaththil kanneer vadikkiraal

Ingu kanneer vadikkiraal
Male : Aandavanae kann thiranthu konjam paarungal

Engal kalyaana veedugalin kadhaiyai kelungal

Engal kalyaana veedugalin kadhaiyai kelungal
Male : Kulamagalai karam pidikka kooli ketkkiraan

Thanga thirumagalin meniyilae ponnai paarkkiraan

Kulamagalai karam pidikka kooli ketkkiraan

Thanga thirumagalin meniyilae ponnai paarkkiraan
Male : Santhathigal tharum thunaiyai niruththu paarkkiraan

Muchchanthiyilae vesiyidam veesi erigiraan

Kaasai veesi erigiraan
Male : Karuvinilae iruvarukkum paththu maadhamae

Mana uravinilae anaivarukkum varkka pedhamae

Aadavarae uyarvu endru enna sattamo

Antha aadavarai pettra inam enna mattamo

Yaen adimai pattamo….
Male : Aandavanae kann thiranthu konjam paarungal

Engal kalyaana veedugalin kadhaiyai kelungal

Soga kadhaiyai kelungal

Soga kadhaiyai kelungal

Tamil Version

பாடகர் : எம். எஸ். விஸ்வநாதன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : ஆண்டவனே கண் திறந்து கொஞ்சம் பாருங்கள்
ஆண்டவனே கண் திறந்து கொஞ்சம் பாருங்கள்
எங்கள் கல்யாண வீடுகளின் கதையைக் கேளுங்கள்
எங்கள் கல்யாண வீடுகளின் கதையைக் கேளுங்கள்
அதிகார மாமியாரின் அட்டகாசங்கள்
அதிகார மாமியாரின் அட்டகாசங்கள்
அவள் அகம்பாவ நாவினிலே மேளதாளங்கள்
டெளரி மேளதாளங்கள் ஆண் : ஆண்டவனே கண் திறந்து கொஞ்சம் பாருங்கள்
எங்கள் கல்யாண வீடுகளின் கதையைக் கேளுங்கள்
எங்கள் கல்யாண வீடுகளின் கதையைக் கேளுங்கள் ஆண் : மருமகளின் பொருள் வரவில் கவனம் வைக்கின்றாள்
தானும் மருமகளாய் வந்த நாளை மறந்து போகிறாள்
மருமகளின் பொருள் வரவில் கவனம் வைக்கின்றாள்
தானும் மருமகளாய் வந்த நாளை மறந்து போகிறாள் ஆண் : ஒரு மகனை சுமந்ததாலே உலகை கேட்கிறாள்
இவளே தன் மகளின் திருமணத்தில் கண்ணீர் வடிக்கிறாள்
இங்கு கண்ணீர் வடிக்கிறாள் ஆண் : ஆண்டவனே கண் திறந்து கொஞ்சம் பாருங்கள்
எங்கள் கல்யாண வீடுகளின் கதையைக் கேளுங்கள்
எங்கள் கல்யாண வீடுகளின் கதையைக் கேளுங்கள் ஆண் : குலமகளை கரம் பிடிக்க கூலி கேட்கிறான்
தங்க திருமகளின் மேனியிலே பொன்னை பார்க்கிறான்
குலமகளை கரம் பிடிக்க கூலி கேட்கிறான்
தங்க திருமகளின் மேனியிலே பொன்னை பார்க்கிறான் ஆண் : சந்ததிகள் தரும் துணையை நிறுத்து பார்க்கிறான்
முச்சந்தியிலே வேசியிடம் வீசி எறிகிறான்
காசை வீசி எறிகிறான் ஆண் : கருவினிலே இருவருக்கும் பத்து மாதமே
மண உறவினிலே அனைவர்க்கும் வர்க்க பேதமே
ஆடவரே உயர்வு என்று என்ன சட்டமோ
அந்த ஆடவரை பெற்ற இனம் என்ன மட்டமோ
ஏன் அடிமை பட்டமோ….. ஆண் : ஆண்டவனே கண் திறந்து கொஞ்சம் பாருங்கள்
எங்கள் கல்யாண வீடுகளின் கதையைக் கேளுங்கள்
சோக கதையைக் கேளுங்கள்……
சோகக் கதையைக் கேளுங்கள்….