Mayor Meenakshi – Kanden Kalyana Penn Song Lyrics

Song: Kanden Kalyana Penn Song Lyrics

Lyricist: Kannadasan

Album: Mayor Meenakshi


English Version

Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela
Music by : M. S. Viswanathan
Lyrics by : Kannadasan
Male : Kandaen kalyaan pen pondra megam

Kandaen kalyaan pen pondra megam

Angae ullaasa orvala odam

Manamagan manamagal manavarai kolamae
Female : Kandaen kalyaan pen pondra megam

Angae ullaasa orvala odam
Female : Sempon meenaatchi nadaththum rajangam

Sirikkum poonthottamo

Idhu selai munthaanai virikkum poomaadhu

Aadum kondaattamo
Male : Alaigal neerottam amman thaerottam

Paruvam pennaattamo

Pani malaigal thaalaattum malargal paaraattum

Kalaigal vellottamo
Female : Siru aththaani muththaaramo

Intha aththaanin achchaaramo

Siru aththaani muththaaramo

Intha aththaanin achchaaramo
Male : Rajavin vattaaramo

Intha rajaththi viththaaramo
Female : Kandaen kalyaan pen pondra megam

Male : Angae ullaasa orvala odam

Female : Manamagan

Male : Manamagal

Both : Manavarai kolamae
Male : Idaiyin meedhaaga valaiyum vannangal

Ilamai poopanthalo

Ilaiyum moodaamal thalaiyum vaaraamal

Asaiyum pon pookkalo
Female : Nadaiyil annangal adaiyum illangal

Idaiyil vaiththaargalo

Nalina ponmaeni suvaiyai paarendru

Unakke thanthaargalo
Male : Sugam ondraaga vaiththaargalo

Nammai ondraakka vaiththargalo

Female : Kann paarkka vaiththaargalo

Unnai pen paarkka vaiththaargalo
Male : Kandaen kalyaan pen pondra megam

Female : Angae ullaasa orvala odam
Male : Varisai palmuththu azhagu poongoththu

Nagaiyil naan aadavaa

Vadhana sevvalli sariyum vannaththil

Medhuvaai naan paadavaa
Female : Adimai pennenum udamai unnodu

Adhigam naan sollavaa

Anaikkum kayundu rasikkum pennundu

Paruvam thaenallavaa
Male : Naan kannaadi paarththaalenna

Female : Adhai kannaththil paarththaalenna

Male : Nenjaththai paarththaalenna

Female : Adhai manjaththil paarththaalenna
Female : Kandaen kalyaan pen pondra megam

Male : Angae ullaasa orvala odam

Female : Manamagan

Male : Manamagal

Both : Manavarai kolamae


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : கண்டேன் கல்யாணப் பெண் போன்ற மேகம்
கண்டேன் கல்யாணப் பெண் போன்ற மேகம்
அங்கே உல்லாச ஊர்வல ஓடம்
மணமகன் மணமகள் மணவறைக் கோலமே பெண் : கண்டேன் கல்யாணப் பெண் போன்ற மேகம்
அங்கே உல்லாச ஊர்வல ஓடம் பெண் : செம்பொன் மீனாட்சி நடத்தும் ராஜாங்கம்
சிரிக்கும் பூந்தோட்டமோ
இது சேலை முந்தானை விரிக்கும் பூமாது
ஆடும் கொண்டாட்டமோ ஆண் : அலைகள் நீரோட்டம் அம்மன் தேரோட்டம்
பருவப் பெண்ணாட்டமோ
பனி மலைகள் தாலாட்டும் மலர்கள் பாராட்டும்
கலைகள் வெள்ளோட்டமோ பெண் : சிறு அத்தாணி முத்தாரமோ
இந்த அத்தானின் அச்சாரமோ
சிறு அத்தாணி முத்தாரமோ
இந்த அத்தானின் அச்சாரமோ ஆண் : ராஜாவின் வட்டாரமோ
இந்த ராஜாத்தி வித்தாரமோ பெண் : கண்டேன் கல்யாணப் பெண் போன்ற மேகம்
ஆண் : அங்கே உல்லாச ஊர்வல ஓடம்
பெண் : மணமகன்
ஆண் : மணமகள்
இருவர் : மணவறைக் கோலமே ஆண் : இடையின் மீதாக வளையும் வண்ணங்கள்
இளமைப் பூப்பந்தலோ
இலையும் மூடாமல் தலையும் வாராமல்
அசையும் பொன் பூக்களோ பெண் : நடையில் அன்னங்கள் அடையும் இல்லங்கள்
இடையில் வைத்தார்களோ
நளினப் பொன்மேனி சுவையைப் பாரென்று
உனக்கே தந்தார்களோ ஆண் : சுகம் ஒன்றாக வைத்தார்களோ
நம்மை ஒன்றாக்க வைத்தார்களோ
பெண் : கண் பார்க்க வைத்தார்களோ
உன்னை பெண் பார்க்க வைத்தார்களோ ஆண் : கண்டேன் கல்யாணப் பெண் போன்ற மேகம்
பெண் : அங்கே உல்லாச ஊர்வல ஓடம் ஆண் : வரிசைப் பல்முத்து அழகுப் பூங்கொத்து
நகையில் நான் ஆடவா
வதனச் செவ்வல்லி சரியும் வண்ணத்தில்
மெதுவாய் நான் பாடவா பெண் : அடிமைப் பெண்ணேனும் உடமை உன்னோடு
அதிகம் நான் சொல்லவா
அணைக்கும் கையுண்டு ரசிக்கும் பெண்ணுண்டு
பருவம் தேனல்லவா ஆண் : நான் கண்ணாடி பார்த்தாலென்ன
பெண் : அதைக் கன்னத்தில் பார்த்தாலென்ன
ஆண் : நெஞ்சத்தைப் பார்த்தாலென்ன
பெண் : அதை மஞ்சத்தில் பார்த்தாலென்ன பெண் : கண்டேன் கல்யாணப் பெண் போன்ற மேகம்
ஆண் : அங்கே உல்லாச ஊர்வல ஓடம்
பெண் : மணமகன்
ஆண் : மணமகள்
இருவர் : மணவறைக் கோலமே…