Naatpadu Theral 2 – Ovvoru Naalum Song Lyrics

Song: Ovvoru Naalum Song Lyrics

Lyricist: Vairamuthu

Album: Naatpadu Theral 2


English Version

Singers : Hariharan and Harini
Music by : G. V. Prakash Kumar
Lyrics by : Vairamuthu
Male : Ovvoru naalum ulagu thirakkum

Udhaya kadhirae vanakkam

Female : Kadhirai kandu kadhavu thirakkum

Kaalai malargaal vanakkam
Male : Ingo engo pozhiya pogum

Eera mazhaiyae vanakkam

Female : Thanga maniyo kaniyo valarkkum

Thaavara kuzhuvae vanakkam
Male : Engal veettil vaasal thelitha

Iravu paniyae vanakkam

Female : Engalai vidavum nandraai paadum

Innisai kuyilgaal vanakkam
Male : Parandhu kondae kaadu valarkkum

Paravai inangaal vanakkam

Female : Nadandhu kondae dhaagam theerkkum

Nanneer nadhigaal vanakkam
Male : Kodi yugangal thuitha pinnum

Kuraiyaa kaatrae vanakkam

Female : Pudhiya ulagai padaikka thoondum

Pazhaiya neruppae vanakkam
Male : Thonmai porulae vanakkam

Naalai thondrum porulae vanakkam

Female : Pirandha uyirae vanakkam

Indru niraindha uyirae vanakkam
Male : Idhaya poarai mudithu vaikkum

Iravu thuyilae vanakkam
Female : Vaeroar uyirin pasiyai pokkum

Vaervai thuliyae vanakkam

Male : Kaayam meedhu marundhaai veezhum

Kanneer thuliyae vanakkam
Female : Aim boodhathin thuimai kaakkum

Athunai uyirkkum vanakkam

Male : Adutha kolil manidharai yaetrum

Arivu thiramae vanakkam
Female : Kalaiyaa kalaiyae vanakkam

Nalla kavidhai porulae vanakkam

Male : Chamathuva mannae vanakkam

Ulaga samaadhaanamae vanakkam
Female : Vaazhum ulagai iyanga cheiyum

Both : Vayittru pasiyae vanakkam


Tamil Version

பாடகர்கள் : ஹரிஹரன் மற்றும் ஹரிணி
இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் பாடல் ஆசிரியர் : வைரமுத்து ஆண் : ஒவ்வொரு நாளும் உலகு திறக்கும்
உதயக் கதிரே வணக்கம்
பெண் : கதிரைக் கண்டு கதவு திறக்கும்
காலை மலர்காள் வணக்கம் ஆண் : இங்கோ எங்கோ பொழியப் போகும்
ஈர மழையே வணக்கம்
பெண் : தங்க மணியோ கனியோ வளர்க்கும்
தாவரக் குழுவே வணக்கம் ஆண் : எங்கள் வீட்டில் வாசல் தெளித்த
இரவுப் பனியே வணக்கம்
பெண் : எங்களை விடவும் நன்றாய்ப் பாடும்
இன்னிசைக் குயில்காள் வணக்கம் ஆண் : பறந்து கொண்டே காடு வளர்க்கும்
பறவை இனங்காள் வணக்கம்
பெண் : நடந்து கொண்டே தாகம் தீர்க்கும்
நன்னீர் நதிகாள் வணக்கம் ஆண் : கோடி யுகங்கள் துய்த்த பின்னும்
குறையாக் காற்றே வணக்கம்
பெண் : புதிய உலகைப் படைக்கத் தூண்டும்
பழைய நெருப்பே வணக்கம் ஆண் : தொன்மைப் பொருளே வணக்கம்
நாளை தோன்றும் பொருளே வணக்கம்
பெண் : பிறந்த உயிரே வணக்கம்
இன்று நிறைந்த உயிரே வணக்கம் ஆண் : இதயப் போரை முடித்து வைக்கும்
இரவுத் துயிலே வணக்கம் பெண் : வேறோர் உயிரின் பசியைப் போக்கும்
வேர்வைத் துளியே வணக்கம்
ஆண் : காயம் மீது மருந்தாய் வீழும்
கண்ணீர்த் துளியே வணக்கம் பெண் : ஐம் பூதத்தின் தூய்மை காக்கும்
அத்துணை உயிர்க்கும் வணக்கம்
ஆண் : அடுத்த கோளில் மனிதரை ஏற்றும்
அறிவுத் திறமே வணக்கம் பெண் : கலையாக் கலையே வணக்கம்
நல்ல கவிதைப் பொருளே வணக்கம்
ஆண் : சமத்துவ மண்ணே வணக்கம்
உலக சமாதானமே வணக்கம் பெண் : வாழும் உலகை இயங்கச் செய்யும்
இருவர் : வயிற்றுப் பசியே வணக்கம்