Om Sakthi – Abiramavalliyin Thiruvarule Song Lyrics

Song: Abiramavalliyin Thiruvarule Song Lyrics

Lyricist: Abirami Patter

Album: Om Sakthi


English Version

Singers : Dheepan Chakravarthi and Vani Jairam
Music by : Shankar Ganesh
Lyrics by : Abirami Patter
Female : Pooththavalae puvanam pathinaangaiyum

Pooththa vannam kaaththavalae pin karanthavalae

Karaikandanukku mooththavalae

Endrum moovaa muguntharkku ilaiyavalae
Male : Maaththavalae unnaiyindri

Mattror dheivam vanthippathae…aa…aa…aa…
Female : Abhiramavalliyin thiruvarulae

Nammai anuthinam kaaththidum ponmalare

Puviyorin kuraitheerkka vanthavalae indru

Poovaagai kaayaagi kaninthavalae
Chorus : Abhiramavalliyin thiruvarulae

Nammai anuthinam kaaththidum ponmalare
Female : Dhanam tharum kalvi tharum oru naalum

Thalarvariyaa manam tharum

Male : Dheiva vadivum tharum nenjil

Vanjamillaa inam tharum

Nallana ellaam tharum anbar enbavarkke

Ganam tharum poonguzhaal abhirami kadaikangalae
Male : Sannathi thedi vanthavarkku

Sagala nalanum thanthaalae

Annaiyin kangal kanivudanae

Abayam tharum innaalae

Santhanaththil nindraalae saambalilum pooththaalae

Female : Kungumaththil siriththaalae

Kuzhanthai ennai anaiththaalae
Chorus : Abhiramavalliyin thiruvarulae

Nammai anuthinam kaaththidum ponmalare
Male : Aaththaalai engal abhiramavalliyai

Andam ellaam pooththaalai

Maadhulam poo niraththaalai

Puviyadanga kaaththaalai

Ainganai paasaangusamum karumbuvillum

Angai saerththaalai mukkanniyai

Thozhuvaarrkku oru theengum illaiyae
Chorus : Samayapuraththil koyil konda sangari

Sooli neeli pathrakaali saampavi

Samayapuraththil koyil konda sangari

Sooli neeli pathrakaali saampavi

Periya paalaiyam jothi thavazhum aalayam

Periya paalaiyam jothi thavazhum aalayam

Arulvadivaai maangaattil amarnthiruppaalae

Analaai nirainthiruppaalae
Chorus : Abhiramavalliyin thiruvarulae

Nammai anuthinam kaaththidum ponmalare

Abhiramavalliyin thiruvarulae

Nammai anuthinam kaaththidum ponmalare


Tamil Version

பாடகர்கள் : தீபன் சக்கரவர்த்தி மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : அபிராமி பட்டர் பெண் : பூத்தவளே புவனம் பதினான்கையும்
பூத்த வண்ணம் காத்தவளே பின் கரந்தவளே
கறைகண்டனுக்கு மூத்தவளே
என்றும் மூவா முகுந்தற்க்கு இளையவளே ஆண் : மாத்தவளே உன்னையின்றி
மற்றோர் தெய்வம் வந்திப்பதே…..ஆ…ஆ….ஆ…. பெண் : அபிராமவல்லியின் திருவருளே நம்மை
அனுதினம் காத்திடும் பொன்மலரே
புவியோரின் குறைத்தீர்க்க வந்தவளே இன்று
பூவாகி காயாகி கனிந்தவளே… குழு : அபிராமவல்லியின் திருவருளே
நம்மை அனுதினம் காத்திடும் பொன்மலரே பெண் : தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும்
தளர்வறியா மனம் தரும்
ஆண் : தெய்வ வடிவும் தரும் நெஞ்சில்
வஞ்சமில்லா இனம் தரும்
நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே… ஆண் : சன்னதி தேடி வந்தவர்க்கு
சகல நலனும் தந்தாளே
அன்னையின் கண்கள் கனிவுடனே
அபயம் தரும் இந்நாளே
சந்தனத்தில் நின்றாளே சாம்பலிலும் பூத்தாளே
பெண் : குங்குமத்தில் சிரித்தாளே
குழந்தை என்னை அணைத்தாளே….. குழு : அபிராமவல்லியின் திருவருளே
நம்மை அனுதினம் காத்திடும் பொன்மலரே ஆண் : ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை
அண்டம் எல்லாம் பூத்தாளை
மாதுளம் பூ நிறத்தாளை
புவியடங்கக் காத்தாளை
ஐங்கணைப் பாசாங்குசமும் கரும்புவில்லும்
அங்கை சேர்த்தாளை முக்கண்ணியைத்
தொழுவார்க்கு ஒரு தீங்கும் இல்லையே குழு : சமயபுரத்தில் கோயில் கொண்ட சங்கரி
சூலி நீலி பத்ரகாளி சாம்பவி
சமயபுரத்தில் கோயில் கொண்ட சங்கரி
சூலி நீலி பத்ரகாளி சாம்பவி
பெரியபாளையம் ஜோதி தவழும் ஆலயம்
பெரியபாளையம் ஜோதி தவழும் ஆலயம்
அருள்வடிவாய் மாங்காட்டில் அமர்ந்திருப்பாளே
அனலாய் நிறைந்திருப்பாளே…… குழு : அபிராமவல்லியின் திருவருளே
நம்மை அனுதினம் காத்திடும் பொன்மலரே
அபிராமவல்லியின் திருவருளே
நம்மை அனுதினம் காத்திடும் பொன்மலரே