Snegithiye – Radhai Manathil Song Lyrics

Movie: Snegithiye

Song: Radhai Manathil Song Lyrics

Lyricist: Vairamuthu

English Version

Singers : K.S. Chithra and Sujatha Mohan

Music by : Vidyasagar

Female : { Radhai manathil radhai manathil enna ragasiyamo
Kan rendum thandhi adika kanna vaa kandu pidika } (2)

Female : Kollai nilavadikum vellai raathiriyil
Kodhai radhai nadanthaal

Female : Moongil kaatil oru gaanam kasinthavudan
Moochu vaangi uraindhaal

Female chorus : Paadal vandha vazhi aadai paranthathaiyum
Paavai marandhu tholainthaal

Female chorus : Nenjai moodikolla aadai thevai endru
Nilavin oliyai iluthaal

Female : Nenjin osai odunkivitaal
Nizhalai kandu nadungi vitaal
Kannan thedi vandha magal
Thannai tholaithu mayangivitaal

Female : Thaan irukindra idathinil irudhayam kaanavillai
Engae engae sol sol

Female : Kan rendum thandhi adika kanna vaa kandu pidika

Female chorus : Radhai manathil radhai manathil enna ragasiyamo
Kan rendum thandhi adika kanna vaa kandu pidika

Female : …………………………………………………

Female : Kannan oodhum kuzhal kaatril thoongivitu
Kaantham polae ilukum

Female : Mangai vandhavudan maraindhu kolluvadhu
Maaya kannan vazhakam

Female : Kaadu irunduvida kangal sivandhuvida
Kaadhal radhai alaindhaal

Female : Avanai thedi aval kannai tholaithu vittu
Aasai noyil vilundhaal

Female : Udhadu thudikum pechu illai
Uyirum iruku moochu illai
Vandha paathai ninaivu illai
Pogum paathai puriyavillai

Female : Un pullaanguzhal satham vanthaal
Pedhai radhai jeevan kolvaal
Kanna ingae vaa vaa

Female : Kanneeril uyir thudika kanna vaa uyir koduka

Female : Radhai manathil radhai manathil enna ragasiyamo
Kan rendum thandhi adika kanna vaa kandu pidika

Female chorus : ………………………………………..

Female : Kannam theendiyadhum kannan endru
Andha kanni kangal vizhithaal

Female : Kannam theendiyadhu kannan alla
Verum kaatru endru thigaithaal

Female : Kangal moodi kondu kannan perai solli
Kaigal neeti azhaithaal

Female : Kaatil tholaithuvita kannin neer thuliyai
Ingu kandu pidithaal

Female : Vizhiyin siragai vaangikondu
Kizhaku noki siragadithaal
Kuyilin kuralai vaangi kondu
Koovi koovi aval azhaithaal

Female : Aval kurai uyir karaiyum mun
Udal mannil sariyum mun
Kanna kanna nee vaa

Female : Kanneeril uyir thudika kanna vaa uyir koduka

Female chorus : …………………………………………

Tamil Version

பாடகிகள் : கே.எஸ். சித்ரா, சுஜாதா மோகன்

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

பெண் : { ராதை மனதில்
ராதை மனதில் என்ன
ரகசியமோ கண் ரெண்டும்
தந்தியடிக்க கண்ணா வா
கண்டு பிடிக்க } (2)

பெண் : கொள்ளை நிலவடிக்கும்
வெள்ளை ராத்திரியில் கோதை
ராதை நடந்தால்

பெண் : மூங்கில் காட்டில்
ஒரு கானம் கசிந்தவுடன்
மூச்சு வாங்கி உறைந்தாள்

பெண் குழு : பாடல் வந்த வழி
ஆடை பறந்ததையும் பாவை
மறந்து தொலைந்தாள்

பெண் குழு : நெஞ்சை மூடிக்
கொள்ள ஆடை தேவை என்று
நிலவின் ஒளியை இழுத்தாள்

பெண் : நெஞ்சின் ஓசை
ஒடுங்கிவிட்டால் நிழலை
கண்டு நடுங்கிவிட்டாள்
கண்ணன் தேடி வந்த மகள்
தன்னை தொலைத்து
மயங்கிவிட்டாள்

பெண் : தான் இருக்கின்ற
இடத்தினில் இருதயம்
காணவில்லை எங்கே
எங்கே சொல் சொல்

பெண் : கண் ரெண்டும்
தந்தியடிக்க கண்ணா
வா கண்டுபிடிக்க

பெண் குழு : ராதை மனதில்
ராதை மனதில் என்ன
ரகசியமோ கண் ரெண்டும்
தந்தியடிக்க கண்ணா வா
கண்டு பிடிக்க

பெண் : …………………………

பெண் : கண்ணன் ஊதும்
குழல் காற்றில் தூங்கிவிட்டு
காந்தம் போல இழுக்கும்

பெண் : மங்கை வந்தவுடன்
மறைந்து கொள்ளுவது
மாய கண்ணன் வழக்கம்

பெண் : காடு இருண்டு விட
கண்கள் சிவந்து விட காதல்
ராதை அலைந்தால்

பெண் : அவனை தேடி அவள்
கண்ணை தொலைத்து விட்டு
ஆசை நோயில் விழுந்தால்

பெண் : உதடு துடிக்கும் பேச்சு
இல்லை உயிரும் இருக்கு
மூச்சு இல்லை வந்த பாதை
நினைவு இல்லை போகும்
பாதை புரியவில்லை

பெண் : உன் புல்லாங்குழல்
சத்தம் வந்தால் பேதை ராதை
ஜீவன் கொள்வாள் கண்ணா
இங்கே வா வா

பெண் : கண்ணீரில் உயிர்
துடிக்க கண்ணா வா
உயிர் கொடுக்க

பெண் : ராதை மனதில்
ராதை மனதில் என்ன
ரகசியமோ கண் ரெண்டும்
தந்தியடிக்க கண்ணா வா
கண்டு பிடிக்க

பெண் குழு : ……………………….

பெண் : கன்னம் தீண்டியதும்
கண்ணன் என்று அந்த கன்னி
கண்கள் விழித்தாள்

பெண் : கன்னம் தீண்டியது
கண்ணன் அல்ல வெறும்
காற்று என்று திகைத்தாள்

பெண் : கண்கள் மூடிக்கொண்டு
கண்ணன் பேரை சொல்லி
கைகள் நீட்டி அழைத்தாள்

பெண் : காட்டில் தொலைத்துவிட்ட
கண்ணின் நீர் துளியை இங்கு
கண்டு பிடித்தாள்

பெண் : விழியின் சிறகை
வாங்கிக்கொண்டு கிழக்கு
நோக்கி சிறகடித்தாள்
குயிலின் குரலை
வாங்கிக்கொண்டு கூவி
கூவி அவள் அழைத்தாள்

பெண் : அவள் குறை உயிர்
கரையும்முன் உடல் மண்ணில்
சரியும்முன் கண்ணா கண்ணா
நீ வா

பெண் : கண்ணீரில் உயிர்
துடிக்க கண்ணா வா
உயிர் கொடுக்க

பெண் குழு : …………………

*****END*****